ஓ.டி.டியில் வெளியாகிறது ஜி.வி.பிரகாஷின் ரெபெல் படம்.! - Seithipunal
Seithipunal


நிகேஷ் ஆர்.எஸ் இயக்கத்தில் ஜி,வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரெபெல்'. இந்த படத்தில் ஜி,வியுடன் மமிதா பைஜு, வெங்கடேஷ் வி.பி, ஷாலு ரகிம், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷே இசையமைத்துள்ளார். மேலும், அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

கடந்த மார்ச் 22-ம் தேதி வெளியான இந்தப் படத்தின் மூலம் 'பிரேமலு' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி புகழ் பெற்ற மமிதா பைஜு தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது ரெபெல் படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இந்தப் படம் வருகிற 11-ந் தேதி சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rebel movie ott update


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->