திமுக அமைச்சர் செய்த காரியம்.. பொங்கி எழுந்த பாஜகவினர்... கடைசில என்ன ஆச்சு பாருங்க..!!
BJP admin criticized Minister Mano Thangaraj with harsh words
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மீதான பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய பாஜக அரசை கண்டித்து மல்யுத்த வீராங்கனைகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.நேற்று புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவின் போது முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயற்ச்சித்தனர். அப்போது விளையாட்டு வீர்ர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
இது தொடர்பாக டுவிட்டர் பதிவிட்ட தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் சொல்லிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. அவர் மீது இதுவரை அக்கட்சியின் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து தலைநகரில் போராடி வருகிறார்கள்.
இந்தியநாடாளுமன்றத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவின்போது, போராட்டம் நடத்திய அவர்களை இழுத்துச் சென்றும் - தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது. குடியரசுத் தலைவரையே புறந்தள்ளி, அனைத்து எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கும் ஆளாகி நடைபெறும் திறப்புவிழா நாளில் அராஜகமும் அரங்கேறுவதுதான் அறமா? என விமர்சனம் செய்திருந்தார்
இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ரீ டிவிட் செய்து பிரதமர் மோடி செங்கோலை கீழே விழுந்து வழங்கும் புகைப்படத்துடன் "மூச்சு இருக்கா? மானம் ?? ரோஷம் ???" என பதிவிட்டிருந்தார்.
பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இத்தகைய கருத்துக்கு பாஜக தரப்பிலிருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது. தமிழ்நாடு பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில் "அமைச்சர் மனோ தங்கராஜ் பிரதமர் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தரக்குறைவாக பதிவிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அந்த நபரை அமைச்சர் பொறுப்பிலிருந்து அகற்றுவதோடு, கைது செய்து தகுந்த தண்டனை பெற்று தர வேண்டியது தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் கடமை மற்றும் பொறுப்பு" என வலியுறுத்தி இருந்தார்.
இதற்கு ஒரு படி மேலே போய் தமிழக பாஜக விளையாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் "அடேய் பொறுக்கி மனோ தங்கராஜ் ஒழுங்கா நாளைக்கு அறிவாலயத்தில் போய் ஒளிஞ்சிக்க..." என கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்துள்ளார். இந்நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ் தனது பதிவை நீக்கி உள்ளார். இருப்பினும் அந்த பதிவின் ஸ்க்ரீன் ஷாட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆளுங்கட்சி தலைவர்களை மீம்ஸ் மூலம் விமர்சனம் செய்தால் கைது செய்யும் காவல்துறை அமைச்சரை கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்துள்ள பாஜக நிர்வாகியை கைது செய்யுமா.? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
English Summary
BJP admin criticized Minister Mano Thangaraj with harsh words