அந்த திட்டமே வேண்டாம்! போராட்டத்தை அறிவித்து கொந்தளித்த அண்ணாமலை! - Seithipunal
Seithipunal


மதுரை - தூத்துக்குடி இடையேயான புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை நிரந்தரமாக கைவிட வேண்டும் என்று, தமிழக அரசு  எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், இது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் தடையாக மாறி உள்ளதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் குற்றம் சாட்டி உள்ளார். 

மேலும் இதனை கண்டித்து விருதுநகர் மாவட்ட மக்கள் உடன் இணைந்து வரும் 20 ஆம் தேதி மாபெரும் போராட்டத்தை நடத்த உள்ளதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது குறித்த அவர் என்ன அறிவிப்பில், பிரதமர் மோடி அவர்கள், வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி, நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கிக் கொண்டு செல்லும் சிறப்பான செயல்பாடுகளை மேற்கொண்டிருக்கையில், இங்குள்ள திமுக அரசு, தமிழகத்தைப் பின்னோக்கி இழுத்துச் செல்கிறது.

மதுரை, தூத்துக்குடி இடையே, அருப்புக்கோட்டை வழியாக புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டம் திமுக அரசின் எதிர்ப்பின் காரணமாகக் கைவிடப்பட்டுள்ளதை, ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நேற்று ஊடகங்களில் தெளிவுபடுத்தினார்.

தமிழகத்தின் பல்வேறு ரெயில் திட்டங்களுக்குத் தேவையான 3,389 ஹெக்டேர் நிலத்தில், வெறும் 26% நிலம் மட்டுமே, திமுக அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளதை, சமீபத்தில் நமது ரெயில்வே அமைச்சர் அவர்கள் கூறியிருந்தார்.

அருப்புக்கோட்டை வழியாகச் செல்லும் மதுரை-தூத்துக்குடி புதிய ரெயில் பாதைக்கு, சுமார் 870.98 ஹெக்டேர் நிலம் தேவைப்பட்டது, ஆனால் தமிழக அரசு வெறும் 74.87 ஹெக்டேர் நிலத்தை மட்டுமே கையகப்படுத்தியுள்ளது. திமுக அரசின் நத்தை வேகச் செயல்பாடு, இப்போது அருப்புக்கோட்டை மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் தடையாக மாறியுள்ளது.

திமுக அரசின் இந்த மக்கள் விரோத அணுகுமுறையை, தமிழக பாஜக சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம். வரும் ஜனவரி 20-ந்தேதி அன்று, அருப்புக்கோட்டை நகரில், புதிய ரெயில் பாதையை ரத்து செய்த திமுக அரசின் முடிவுக்கு எதிராக, விருதுநகர் மாவட்ட மக்களுடன் இணைந்து, மாபெரும் போராட்டம் நடத்தவிருக்கிறோம்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Annamalai Protest against DMK govt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->