இப்போ கும்பி எரியலயா? குடல் கருகலயா? - CM ஸ்டாலின், DyCM உதயநிதிக்கு பாஜக நாராயணன் கேள்வி! - Seithipunal
Seithipunal


பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "திமுகவினர் யாரேனும் பேனர் கலாச்சாரத்தை கடைப்பிடித்தால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கவும் கடமைப்பட்டுள்ளேன். பேனர் கலாச்சாரத்தை வேரறுக்க உறுதியெடுப்போம்" : மு.க.ஸ்டாலின் (01/07/2017).

"பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி; கட்டளையாகச் செயல்படுத்துங்கள்" : முதல்வர் ஸ்டாலின் (23/08/2021).

"எனது பிறந்தநாளுக்கு பிளெக்ஸ் பேனர்கள் வைக்க கூடாது - உதயநிதி ஸ்டாலின்" (இன்று 25/11/2024).

“கும்பி எரியுது, குடல் கருகுது இந்த வீண் ஆடம்பர கட்-அவுட் ஒரு கேடா?” என மக்கள் கேட்கிறார்கள்" : மு.க. ஸ்டாலின் (27/10/2017).

இதோ, இன்று (25/11/2024) சென்னை மயிலாப்பூரில் பொது மக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள், கட் -அவுட்டுகள்!

மு.க.ஸ்டாலின் அவர்களே, உங்கள் எச்சரிக்கையை பொருட்படுத்தாது உங்கள் கட்சியினர் பேனர் வைத்துள்ளனரே, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா? 

வேரறுக்க உறுதியெடுப்போம் என்று கூறி விட்டு மேலும் மேலும் விஷ விதையை விதைப்பதேன்? உங்கள் கட்டளையை காற்றில் பறக்க விட்டு விட்டார்களே உங்கள் கட்சியினர்? 

இப்போது கும்பி எரியவில்லையா? குடல் கருகவில்லையா? என மக்கள் கேட்கிறார்கள்! உதயநிதி ஸ்டாலின் அவர்களே, வைக்கக் கூடாது என்றால் வைக்க வேண்டும் என்பது தான் திராவிட மாடலா? என்று நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Narayanan condemn to DMK MK Stalin Udhay


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->