திமுகவின் அடிமை, அடிவருடி திருமாவளவனுக்கு என்ன தகுதி இருக்கு? கிழித்தெடுத்த பாஜக! - Seithipunal
Seithipunal


நேற்று விசிக தலைவர் திருமாவளவன் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், "2001 லிருந்து பாஜக திமுகவுடனும் கூட்டணி வைத்து பார்த்தான், அதிமுகவுடனும் கூட்டணி வைத்து பார்த்தான். யார் யாருடனோ கூட்டணி வைத்து பார்த்தான். தமிழ்நாட்டிற்குள் வேரே பிடிக்கவில்லை. சும்மா ஏதோ அதிமுக ஒட்டு வாங்கியதால் நாங்கள் வளர்ந்து விட்டோம் என்கிறான். நீ தனியாக நின்று பார். உன் கதி என்ன என்று தெரியும், உன் லட்சணம் என்ன என்று தெரியும்" என்று திருமாவளவன் பேசி இருந்தார்.

இந்நிலையில், திருமாவளவனின் பேச்சுக்கு பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்.

அதில், "கடந்த 50 வருடங்களில் தி மு க, அதிமுக கூட்டணியில் இல்லாத எந்த கட்சியும் 10 % ஓட்டை தாண்டியதில்லை, ஆனால் 2024ல்  அண்ணாமலை தலைமையிலான பாஜக 12 % வாக்குகளை பெற்று தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.  

திருமாவளவனின் விசிக ஏதோ தனியாக நின்று தேர்தலில் வெற்றி பெற்றது போல் மார் தட்டி கொள்வது வெட்கக்கேடு. விசிக தொடர்ந்து திமுக வுடனும், அதிமுகவுடனும் கூட்டணி வைத்து பார்த்தான். தமிழ்நாட்டிற்குள் வேரே பிடிக்கவில்லை. சும்மா ஏதோ ஒரு குறிப்பிட்ட ஜாதியை, மதத்தை இழித்தும், பழித்தும் பேசுவதால் நாங்கள் வளர்ந்து விட்டோம் என்கிறான்.

2016ல் பாஜகவும், விசிகவும் திமுக, அதிமுக கூட்டணியில் இடம்பெறவில்லை. ஆனால், விசிக வை விட பாஜக வாங்கிய ஒட்டு நான்கு மடங்கு அதிகம். சவால் விடுகிறேன், விசிகவே நீ தமிழகத்தில் தனியாக நின்று பார், உன் கதி என்னவென்று தெரியும், உன் லட்சணம் என்னவென்று தெரியும். திமுகவின் அடிமைகளுக்கு, அடிவருடிகளுக்கு பாஜக குறித்து விமர்சனம் செய்ய எந்த தகுதியும் இல்லை" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Narayanan condemn to VCK Thirumavalavan DMK MK stalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->