யார் முட்டாள்? பெரியார் முட்டாளா? இல்லை முதல்வர் ஸ்டாலின்....! பாஜக நாராயணன் காட்டமான விமர்சனம்!
BJP Narayanan reply to CM Mkstalin DMK
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது சமூக வலைதளப்பாக்கத்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கோயில் இருக்கும் தெருவுக்குள் நுழையாதே என்றார்கள், நுழைந்தோம்; கோயிலுக்குள் நுழையாதே எனத் தடுத்தார்கள், நுழைந்தோம்; அத்தனை தடைகளையும் உடைப்போம்; சமத்துவத்தை நிலைநாட்டுவோம்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக சட்டமியற்றினோம். பயிற்சி முடித்துப் பலரும் வந்து கொண்டிருக்கிறார்கள், திராவிடம் மகிழ்கிறது" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள பதிலில், "
'கடவுள் இல்லை!
கடவுள் இல்லை!
கடவுளைப் போதித்தவன் ஒரு காட்டுமிராண்டி
கடவுளை நம்புகிறவன் முட்டாள்
கடவுளைப் பிரச்சாரம் செய்பவன் அயோக்கியன்' என்றவர்கள் கோயிலுக்குள் நுழைந்தோம் என்கிறார்கள், மாற்றம் முன்னேற்றம்.
அனைவரும் கோவிலுக்குள் நுழைய சட்டமியற்றியது இராஜாஜி, அழைத்து சென்றது பசும்பொன் முத்துராமலிங்க தேவர், வைத்தியநாத ஐயர்.
யார் காட்டுமிராண்டி? சட்டமியற்றியவர்களா? கடவுள் இல்லை என்றவர்களா? யார் முட்டாள்? கடவுளை நம்பாதே என்றவர்களா? அல்லது அத்தனை தடைகளையும் உடைத்தோம் என்பவர்களா?
யார் அயோக்கியன்? கடவுளை பிரச்சாரம் செய்யாதே என்றவர்களா? அல்லது கடவுளை பிரச்சாரம் செய்ய சட்டமியற்றியதாக மார் தட்டிக் கொள்பவர்களா?
அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக உள்ளார்கள். சமத்துவம் எங்கும் உள்ளது. ஆனால், தமிழகத்தில் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே முதல்வராக முடியும் என்ற எழுதப்படாத சட்டம் இருக்கிறதே? இது தான் 'திராவிட சமத்துவமா' என்கிறார்கள் மக்கள்" என்று நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
BJP Narayanan reply to CM Mkstalin DMK