9 வயது பெண் குழந்தைகளை கூட திருமணம் செய்து கொள்ளலாம்! மத அடிப்படைவாத அரசு கொண்டுவந்த கொடும் சட்டம் - பாஜக! - Seithipunal
Seithipunal


பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "ஆண்கள் ஒன்பது வயது பெண் குழந்தைகளை கூட திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஈராக்கில் புதிய சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட இருக்கிறது. 

மேலும், பெண்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமை, குழந்தைகளை பாதுகாக்கும் உரிமை மற்றும் சொத்துரிமையை மறுக்கவும் சட்டத் திருத்தங்கள் வர உள்ளன. அதே போல் குடும்ப விவாகரங்களை இனி மதத் தலைவர்களே தீர்ப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த சட்டத் திருத்தங்களானது 'சட்டவிரோத தொடர்புகளை தடுக்கும்' என்றும் இஸ்லாமிய ஷரியத் சட்டத்தின் படி பெண்களை பாதுகாக்கும் நடவடிக்கை என்றும் ஷியா வகுப்பை சேர்ந்த பழமைவாத கட்சிகள் கூறுகின்றன. 

இதற்கு ஈராக்கில் உள்ள பெண்கள் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் தங்களின் பிடியில் நாடு இருக்க வேண்டும் என்று கருதியே இந்த கொடும் சட்டங்களை ஈராக்கில் உள்ள மத அடிப்படைவாத அரசு கொண்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Narayanan say about Iraq law


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->