அன்று ஓசி, ஓசி.. இன்று சேற்றை வாரி வீசிய மக்கள்! அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இதை மறந்துடாதீங்க - பாஜக நாராயணன்! - Seithipunal
Seithipunal


விழுப்பரத்தில் வெள்ள சேதங்களை பார்வையிட சென்ற அமைச்சர் பொன்முடி மற்றும் அதிகாரிகளின் மீது மழை, புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் சேற்றை வாரி வீசியுள்ளது, மக்கள் 'திராவிட மாடல் அரசின்' மீது கடுங் கோபத்தில் உள்ளதை உணர்த்துவதாக பாக்க மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "விழுப்புரம் மாவட்ட மக்களை 'ஓசி, ஓசி பஸ்ல போறீங்க' என்பது போன்ற பல்வேறு வார்த்தைகளால் அமைச்சர் பொன்முடி அவர்கள் அவமானப்படுத்தி வந்ததை நாம் கடுமையாக கண்டித்திருக்கிறோம். 

அப்போது கூட மக்கள் அமைதி காத்து, கடந்து சென்றார்கள் என்ற போதிலும், புயலால் மிகப் பெரிய பாதிப்பை சந்தித்து கொண்டிருக்கும் இந்நேரத்தில், அரசு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெச்செரிக்கையோடு செய்யாதது மக்களை சேற்றை வாரி வீச வைத்திருக்கிறது. 

சென்னையை தவிர மற்ற மாவட்டங்களை முறையாக கவனிக்காமல் அரசும், அதிகாரிகளும் அலட்சியப்படுத்தியிருப்பதே அரசாங்கத்தின் நிர்வாக தோல்வி என்றால் மிகையாகாது. பெரும்பாலான அமைச்சர்கள் தங்களின் தொகுதிகளில் இல்லாமல், சென்னையிலேயே வாழ்ந்து கொண்டிருப்பதும், தங்கள் கவனத்தை சொந்த தொகுதியில் செலுத்தாதாதுமே இந்நிலைக்கு காரணம். 

நீர்நிலைகளை தூர் வாராதது, நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகள், சட்ட விரோத கட்டுமானங்கள், மோசமான சாலைகள், கட்டமைப்புகளை புதிப்பிக்காதது போன்ற பல்வேறு காரணங்களே மழை, புயல், வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு காரணம். 

இவற்றை ஒருங்கிணைத்து, மேற்பார்வையிட்டு, நிர்வகிப்பதே சட்டமன்ற உறுப்பினர்கள், ஆட்சியர், அரசு அதிகாரிகள் ஆகியோரின் கடமை மற்றும் பொறுப்பு. ஆனால், மோசமான நிர்வாகம், சட்ட விரோத செயல்கள், லஞ்சம், ஊழல் ஆகியவற்றால் மாவட்ட நிர்வாகம் செயலிழந்து போய் விடுவது மழை, புயல் காலங்களில் வெளிப்பட்டு விடுகிறது என்பதை இந்த புயல் உணர்த்துகிறது.

ஓசி பஸ், ஆயிரம் ரூபாய் பணம், வீண் வெட்டி பேச்சு  இவையெல்லாம் மட்டுமே மக்களை கவர்ந்து விடாது, முறையான, ஊழலற்ற, முறைகேடுகளற்ற நிர்வாகம் தான் மக்களால் விரும்பப்படும். மக்கள் தங்கள் குடும்பங்களை பாதுகாக்க முடியாத சூழ்நிலையில், வெகுண்டு எழுவார்கள் என்பதை உணர்வதோடு, மக்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டியது தான் என்பதையும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நினைவில் கொள்ள வேண்டும்.

சமீபத்திய புயல் மற்றும் மழையினால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் சொல்ல முடியாத அளவிற்கு கடும் பாதிப்புக்கு, துயரங்களுக்கு  உள்ளாகியுள்ளார்கள் மக்கள். உடனடியாக தமிழக அரசு இதிலும் அரசியல் ஆதாயம் தேடாமல் உருப்படியான நிர்வாகத்தை நடத்தி ஆவன செய்ய வேண்டியது தான் தற்போது அவசியமும், அவசரமும்" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Narayanan say about Ponmudi vilupuram incident DMK MK Stalin Govt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->