பத்திரிகை அலுவலகத்தையே எரித்தவர்கள் தான் கருத்து சுதந்திரத்தைப் பற்றி பேசுகிறார்கள் - CM ஸ்டாலினுக்கு தமிழிசை பதிலடி! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடியை கடுமையாக அவமதிக்கும் வகையில் புகைப்படம் வெளியிட்ட பிரபல நாளிதழின் இணைய பக்கம் மத்திய அரசால் முடக்கப்பட்டதாக சொல்லப்படுகிட்டது.

இதனை கண்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள கண்டன செய்தியில், "இதழியலில் நூறாண்டு காலமாக இயங்கி வரும் விகடனின் இணையத்தளம் முடக்கப்பட்டிருப்பதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகளுக்காக ஊடகங்கள் முடக்கப்படுவது ஜனநாயகத்துக்கு அழகல்ல! பா.ஜ.க.,வின் பாசிசத் தன்மைக்கு இது எடுத்துக்காட்டு ஆகும். முடக்கப்பட்ட இணையத்தளத்துக்கு உடனடி அனுமதி வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை கொடுத்துள்ள பதிலில், "ஒரு கருத்துக்கணிப்பிற்காக... மதுரை.. தினகரன் அலுவலகத்தையே.. எரித்தவர்கள் தான்.. இந்த கருத்து சுதந்திரத்தைப் பற்றி பேசுகிறார்கள்.
 
தமிழகத்தில் உள்ள அவல நிலையை கருத்தில் கொண்டு.. முதல்வரின் போஸ்டரில் எதிர்வினை ஆற்றிய.. பாட்டியை.. படம் பிடித்துப் போட்டவரை.. கைது செய்து.. யார் அந்த பாட்டி என்று அவரையும் தேடி.. பொதுமக்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு கூட மதிப்பளிக்காதவர்கள்.. கருத்து சுதந்திரத்தை பற்றி.. பேசுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP Tamilisai Reply to DMK MK STalin


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->