பிரதமர் செய்தால் தவறு..இப்போ நீங்க என்ன பண்றீங்க.. முதல்வர் பயணம் குறித்து பாஜக  விமர்சனம்.! - Seithipunal
Seithipunal


பாஜகவின் வானதி சீனிவாசன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் அதேபோல் திமுகவினருக்கு விமர்சனத்தையும் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பாஜக கட்சி சார்பில் நடந்த கூட்டத்தில் பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய அளவிலான மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் புதுச்சேரியில் முதல் முறையாக நடைபெற உள்ளது. அனைத்து மாநில நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் மத்திய அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அதன் பலன்கள் குறித்து விளக்கப்படும் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய இவர், புதிய முதலீடுகளை உருவாக்கவும், முதலீட்டாளர்களை ஈர்க்கவும் வெளிநாடு சென்ற தமிழக முதல்வர் பயணத்தை வரவேற்கிறோம். அதே சமயத்தில் நாங்கள் விமர்சனம் செய்யவில்லை. இதே நோக்கத்திற்காக தான் பிரதமர் மோடி பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆனால் அப்போதெல்லாம் திமுக விமர்சனம் செய்தது என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP vanathi srinivasan speech about MK Stalin Dubai tour


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->