விஜய் மக்கள் இயக்கம் பாஜகவுக்கு ஆதரவு.?.. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விளக்கம்.! - Seithipunal
Seithipunal


பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் நடைபயணத்தை கடந்த ஜூலை 28ஆம் தேதி தொடங்கினார். இந்த நடைப்பயணத்தை ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.

இந்த நடை பயணத்தில் திமுக அரசுக்கு எதிராக வாசகங்களுடன் புகார் பெட்டி இடம்பெற்றுள்ளது. அதன்படி நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் சட்டம் ஒழுங்கு, ஊழல் போன்றவற்றை பொதுமக்கள் புகார் போட்டியின் மூலம் தெரிவிக்கலாம் என பாஜக தெரிவித்திருந்தது.

அதன்படி கடந்த ஜூலை 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கிய பாதயாத்திரை பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது மதுரையில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்ட போது விஜய் மக்கள் இயக்கத்தினர் சிலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் விஜய் மக்கள் இயக்க கொடியுடன் கலந்து கொண்டு 'தளபதி வாழ்க' என்று கோஷம் எழுப்பினர்.

அப்போது அங்கு பேசிய விஜய் மக்கள் நிர்வாகி ஜிகே பத்ரி ஊழலற்ற நல்லாட்சியை எதிர்பார்க்கிறோம் ஊழல் செய்யக்கூடாது என்று எங்கள் அண்ணனும் சொல்கிறார். இந்த அண்ணனும் அதேதான் கூறுகிறார். தளபதி மூத்தவர், இவர் இளையவர் நல்லதுக்கு ஆதரவு தெரிவிப்பது தான் நல்ல மனுஷனுக்கு அடையாளம் அதனால் நாங்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்க வந்துள்ளோம் என கூறியிருந்தார்.

விஜய் மக்கள் இயக்கம் இதுவரை யாருக்கும் ஆதரவு தெரிவிக்காத நிலையில், மதுரை விஜய் மக்கள் நிர்வாகி இவ்வாறு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 


இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அந்த பதிவில், "தளபதி விஜய் மக்கள் இயக்கக் கொடியோடு மாற்றுக்கட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக செய்திகளில் வெளியான நபர்கள் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின்  எந்த பொறுப்பிலும் இல்லை, மற்றும்  அவர்களுக்கும் தளபதி மக்கள் இயக்கத்திற்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்." என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bussy Anand explain about Annamalai rally and vijay Makkal Iyakkam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->