பெத்தேல் நகர் ஆக்கிரமிப்பு : தமிழக அரசின் நடவடிக்கை தவறில்லை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.!
chennai peththel lamnd issue
ஈச்சம்பாக்கம் பெத்தேல் நகர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் தமிழக அரசின் நடவடிக்கைகள் தவறில்லை என்று, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை ஈச்சம்பாக்கம் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்ட பெத்தேல் நகர் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பெத்தேல் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் தொடர்ந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், குடியிருப்போர் விவரங்கள் அரசுக்கு வழங்க உத்தரவிட உத்தரவிடப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து, பெத்தேல் நகர் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தகவல் தெரிவித்தது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'தற்போது அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் தமிழக அரசு, இத்தனை ஆண்டுகளாக ஏன் அதனை அனுமதித்தது?' என்று கேள்வி எழுப்பினர்.
'தற்போது ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் நீதிமன்றம் தலையிட முடியாது' என்று தெரிவித்த நீதிபதிகள். ,ஆக்கிரமிப்புகளை அகற்றும் தமிழக அரசின் நடவடிக்கைகளில் எந்தவிதமான தவறும் இல்லை, என்று தெரிவித்தனர்.
மேலும் இந்த வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.
English Summary
chennai peththel lamnd issue