திமுக-அதிமுக இடையே வெடித்த மோதல்!...வீடுகளுக்கு நாட்டு வெடிகுண்டு வீச்சு!...19 பேரின் கதி என்ன? - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே  குவாகம் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி என்பவர் குவாகம் ஒன்றிய அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலராக இருந்துள்ளார். இதே பகுதியை சேர்ந்தவர் காமராஜ் என்பவர், குவாகம் ஒன்றிய தி.மு.க. கவுன்சிலராக உள்ளார்.

கொளஞ்சி மற்றும் காமராஜ் ஆகியோருக்கு இடையே அரசியல் முன் பகை இருந்து வந்ததக கூறப்படும் நிலையில், கொளஞ்சி தனது வீட்டிற்கு அருகே உள்ள கோவில் காலி நிலத்தில்,  மண் கொட்டினார். அப்போது காமராஜ் அந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது எனக் கூறி மண் கொட்ட எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து இரு தரப்பினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், மீண்டும் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறிய நிலையில், தகவல் அறிந்த குவாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அப்போது  இரு தரப்பினரும் மாறி மாறி கல்லால் தாக்கி கொண்டனர். மேலும், கொளஞ்சி மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்த நபர்களின் வீடுகள் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டது. அதுமட்டுமல்லாமல், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது.

இந்த மோதலில் கொளஞ்சி மனைவி தேவகி, காமராஜ் மனைவி சரோஜா ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவத்தில்  கொளஞ்சி தரப்பில் 4 பேரையும், காமராஜ் தரப்பில் 15 போரையும் கைது செய்துள்ளனர். இதனால் அந்த கிராமத்தில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Clash broke out between dmk and aiadmk country bombs were thrown at houses what is the fate of 19 people


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->