உங்களைப் போன்ற சங்கிகளால் இஸ்லாமிய சமூகம்... கொந்தளிக்கும் திமுக எம்பி! - Seithipunal
Seithipunal


திமுக எம்.பி., எம் எம் அப்துல்லா தனது சமூகவலைத்தள பக்கத்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "நடிகை மதிவந்தி ராணுவ வீரர் குறித்த படத்தில் “அவர் தங்களது பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர் எனக் காட்டவில்லை” எனக் கொதித்து இருக்கிறார். 

அவர் கோவம் நியாயமானதே! வரலாற்றை மாற்றுவது தவறுதான். அவரது நியாயமான கோவத்தை நான் ஆதரிக்கிறேன். 

அதே நேரத்தில் இந்த இடத்தில் உங்கள் அனைவரிடமும் ஒரு கேள்வி கேக்க விரும்புகிறேன். கார்கில் போரில் இறந்த தமிழக வீரர்களின் பெயர்களைக் கூறுங்கள்? உங்கள் அத்தனை பேருக்கும் மேஜர்.சரவணன் என்ற பெயர் நினைவில் வந்து இருக்கும்!! 

தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு இஸ்லாமிய வீரர்களும் அதே பாக்கிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரில் வீர மரணம் அடைந்தார்களே!!! உங்கள் யாருக்காவது அந்த இருவரின் பெயரோ அல்லது இருவரில் ஒரே ஒருவரின் பெயரோ நினைவில் உள்ளதா? இல்லையே! ஏன்!!??

கார்கில் போர் காலத்தில் இப்போது போல சமூக ஊடகங்கள் இல்லை. இந்தியாவில் தமிழகத்தில் பெரும்பாலும் பிராமண ஊடகங்களின் ஆதிக்கம்தான்!! அவர்கள் நினைப்பது மட்டும்தான் செய்தியாக பொது புத்தியில் பதிய வைக்கப்படும்!!  அந்த இருவரின் பெயரும் கவனமாக மீடியா வெளிச்சத்தில் இருந்து தவிர்க்கப்பட்டது. 

பாகிஸ்தானுக்கு எதிராக கார்கிலில் ஒன்றுக்கு இரண்டு உயிர்களை நாட்டுக்கு குடுத்தும் தமிழ்நாட்டில் உங்களைப் போன்ற சங்கிகளால் இஸ்லாமிய சமூகம் தேசப்பற்று இல்லாதவர்கள் போலும், குற்றப் பரம்பரையாகவும் இன்னமும் சித்தரிக்கப்படுகிறோமே!! 

வலிகள் என்பது அத்தனை பேருக்கும் ஒன்றுதான்.. உங்களுக்கு மட்டுமல்ல" என்று எம் எம் அப்துல்லா எம்.பி., தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MP condemn for Amaran Movie Islam Hindu Bramin issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->