பெண் காவலர்கள் மரண விவகாரத்தில் திடீர்திருப்பம்: எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு ஆவடி காவல் ஆணையர் மறுப்பு!
chennai woman police accident death case ADMK EPS Aavadi police statement
சென்னை மாதவரம் காவல்நிலையத்தைச் சேர்ந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ மற்றும் பெண் காவலர் நித்யா ஆகிய இருவரும் ஒரு வழக்கு தொடர்பாக குற்றவாளியைப் பிடிக்க செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சென்றபோது, பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், திமுகஅரசின் அஜாக்கிரதையால் பணியின்போது உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கும் உரிய நிவாரணத்தொகை வழங்க வேண்டுமென்றும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் உடனடியாக வேலை வாய்ப்பு வழங்க வேண்டுமென்றும், இனிமேலும் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நிகழாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில், விபத்தில் பெண் காவலர்கள் உயிரிழந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் புகாருக்கு ஆவடி காவல் ஆணையர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
விபத்தில் இருந்த பெண் காவலர்கள் அலுவலகப் பணிக்காக செல்லவில்லை என்றும், குற்றவாளிகளை பிடிக்கச் சென்றபோது பெண் காவலர்கள் விபத்தில் இருக்கவில்லை என்றும் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
மேலும், விபத்தில் பலியான காவல் உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ மற்றும் காவலர் நித்தியா இருவருமே இருசக்கர வாகனத்தில் தொலைதூரம் செல்லும் வழக்கம் உள்ளவர்கள் என்றும், இறந்த காவலர்களில் ஒருவர் விடுமுறையில் இருந்ததாகவும் ஆவடி காவல் ஆணையர் சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
English Summary
chennai woman police accident death case ADMK EPS Aavadi police statement