கனமழை எதிரொலி - மயிலாடுதுறையில் கூட்டுறவு சங்க விற்பனையாளர் பணிக்கான நேர்முக தேர்வு ஒத்திவைப்பு..! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்துள்ளது. இதனால், தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக கனமழை பெய்து வருகிறது.

இந்தக் கனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. மேலும், சில தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை நடைபெற இருந்த கூட்டுறவுச் சங்க விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிக்கான நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வு டிசம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், நவம்பர் 28 முதல் டிசம்பர் 3 ஆம் தேதி வரை ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நேர்முகத் தேர்வு மாற்றமின்றி நடைபெறும் என்று மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாள விநாயகன் அமுல்ராஜ் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

interview postponed for post of co operative in mayiladuthurai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->