அடுத்த அதிர்ச்சி! சென்னையில் காதலிக்க மறுத்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி! நாடக காதலன் உள்ளிட்ட இருவர் கைது!
Chennai Young woman attampt murder case
சென்னை யானைகவுனி பகுதியில் 19 வயது இளம்பெண்ணை காதலிக்க வற்புறுத்தி, பெட்ரோல் ஊற்றி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் அதே பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் (20) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், சம்பவத்தின் போது அர்ஜுனுடன் இருந்த ஜேம்ஸ் (20) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலீசார் அவர்களுடைய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்ததுடன், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை, அண்ணாநகர் சிறுமி வன்கொடுமை, கள்ளக்குறிச்சி விதவை பெண் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை என தமிழகத்தில் பெண் குழந்தைகள் முதல் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று, பாமக, அதிமுக, பாஜக, நாம் தமிழர், தவெக உள்ளிட்ட காட்சிகள் குற்றம் சாட்டும் நிலையில், தலைநகர சென்னையில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்திருப்பது பெரும் அச்ச உணர்வரவை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Chennai Young woman attampt murder case