காங்கிரஸ் கட்சியின் இளவரசர் மாவோயிஸ்டுகள் மொழியில் பேசுகிறார் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு!! - Seithipunal
Seithipunal


தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட மோடி பேசுகையில் மாவோயிஸ்ட் மொழியில் பேசுகிறார் இளவரசர் ராகுல் காந்தி என்று கடுமையாக விமர்சித்தார்.

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி 4ம் கட்ட தேர்தலும், மே 20ம் தேதி 5ம் கட்ட தேர்தல் 49 தொகுதிக்கும் மக்களவை தேர்தல் வாக்கு பதிவு நடைபெற்று நிறைவடைந்துள்ளது.

 இந்த நிலையில் ஆறாம் கட்ட மக்களவை தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் கட்சித் தலைவர்களும் தயாராகி தீவிரம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், ராகுல் காந்தி பெயரை குறிப்பிடாமல் இளவரசர் என்று குறிப்பிட்டார். காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய பயப்படுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சி புரியும் மாநிலத்தில் முதலீடு செய்ய 50 முறைக்கு மேல் யோசிக்கிறார்கள்.

 தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இந்திய காங்கிரஸ் கட்சியின் இளவரசர் மாவு வேஷ்டிகள் மொழியில் பேசுகிறார் என்று குற்றம் சாட்டினார். பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress prince speaks Maoist language PM Modi accuses


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->