காங்கிரசை கழட்டிவிட்டு எதிர் முனையில் களமிறங்கிய மம்தா, அகிலேஷ் யாதவ்! டெல்லி தேர்தல் சுவாரசியம்!
Delhi AAP INDI Alliance
பிப்ரவரி 5-ம் தேதி டெல்லி சட்டப்பேரவையின் 70 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக இடையே கடும் போட்டி இருக்கும் என்று தெரிகிறது. மேலும், ஆம் ஆத்மி இடம்பெற்றுள்ள இண்டியா கூட்டணியின் முக்கிய கட்சியாக இருந்தாலும், காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது.
இந்த நிலையில், சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் அணி) ஆகிய எதிர்க்கட்சிகளின் மூன்று கட்சிகள் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த செயல் காங்கிரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
அகிலேஷ், மம்தா, உத்தவ் ஆகிய மூவரும் பாஜக தோல்வி அடைய வேண்டும் என்பதற்காக ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
டெல்லியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் தலைமையில் மூன்று முறை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. ஆனால், கடந்த இரண்டு தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. இத்தேர்தலில் முக்கியமான தலைவர்களுக்கு சீட் வழங்கப்பட்டு களமிறங்கியுள்ள நிலையில், காங்கிரசுக்கு எதிராக அதன் கூட்டணி கட்சிகளே களமிறங்கி கடும் நெருக்கடியை கொடுத்துள்ளன.