எங்களிடம் பறிக்கப்பட்டதை திரும்பப் பெற ஒரே வழி ஜனநாயக முறை மட்டுமே - தலாத் மஜித்! - Seithipunal
Seithipunal


ஜம்மு - காஷ்மீரில், சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, முதல் கட்ட சட்டசபை தேர்தல் இன்று தொடங்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் முதற்கட்டமாக 24 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் காஷ்மீரில் 16 தொகுதிகள் மற்றும்  ஜம்முவில் 8 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மேலும் மாநில அந்தஸ்து மறுக்கப்பட்டு நடைபெறும் தேர்தல் என்பதால், அங்கு போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில், புல்வாமா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ஜமாத்-இ-இஸ்லாமி ஆதரவு பெற்ற தலாத் மஜித் கூறுகையில், நான் என் வாக்கை பதிவு செய்துள்ளேன் என்றும், ஜனநாயக வழியில் அனைத்து பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என்று கூறினார்.

மேலும், எங்களிடம் இருந்து எதெல்லாம் பறிக்கப்பட்டதோ, அதையெல்லாம் ஜனநாயக வழியில் மட்டுமே திரும்ப பெற ஒரே வழி என்று கூறிய அவர், ஜனநாயக நடைமுறையில் மக்கள் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Democracy is the only way to get back what was taken away from us Talat Majid


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->