ஜனநாயகத்தின் கடைசி தற்காப்பு பத்திரிகை - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்!
Democracy last defense magazine chief minister mk stalin
ஜனநாயகத்தின் கடைசி தற்காப்பாக பத்திரிகை உள்ளது என்றும், பயம் அல்லது தயவால் கட்டுக்கடங்காமல் பத்திரிகைத் துறை செழிக்க வேண்டும் என்று, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாட்டில் சட்டம், நிர்வாகம், நீதிக்கு அடுத்த படியாக பத்திரிக்கை விளங்கி வருகிறது. 1966 ஆம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அதன் செயல்பாடுகளை தொடங்கியது. இந்த தினம் தேசிய பத்திரிகை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய பத்திரிகை தினத்தில் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநிறுத்தும் ஊடகவியலாளர்களின் இடைவிடாத முயற்சிகளை நாங்கள் கௌரவிக்கிறோம் என்று கூறியுள்ளார்.
மேலும், அதிகரித்து வரும் சகிப்பின்மையின் சகாப்தத்தில், அவர்களின் தைரியம் ஜனநாயகத்தின் கடைசி தற்காப்பாக உள்ளது என்றும், பயம் அல்லது தயவால் கட்டுக்கடங்காமல் பத்திரிகைத் துறை செழிக்க வேண்டும் என்றும், நமது ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் குரல்களைப் பாதுகாப்பதில் உறுதியாக நிற்போம் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Democracy last defense magazine chief minister mk stalin