மோடி 3.0 : அமைச்சரவையில் 'பழசு' முதல் 'புதுசு' வரை... யாரெல்லாம் இருக்காங்க?! - Seithipunal
Seithipunal



மக்களவைத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து பிரதமர் மோடி நேற்று மாலை ஜனாதிபதி திரௌபதி முர்மு தலைமையில் 3வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்த இந்த பதவியேற்பு விழாவில் உலக நாடுகளின் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி முர்மு பதவிப் பிரமாணத்தோடு  ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பிரதமர் மோடியைத் தொடர்ந்து அவரது அமைச்சர்களும் பதவியேற்றனர். மொத்தம் 72 அமைச்சர்கள் பிரதமர் மோடியைத் தொடர்ந்து நேற்று பதவியேற்றுக் கொண்டாலும், யாருக்கும் இன்னும் எந்த இலாகாவும் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்று அனைவருக்கும் இலாகா ஒதுக்கப்படும் என்று கூறப்படும் நிலையில், கடந்த மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், எஸ். ஜெய்சங்கர், பியூஷ் கோயல், எல். முருகன், அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோர் மீண்டும் அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.

இதையடுத்து மோடி 3.0 அமைச்சரவையின் மிக இளம் வயது அமைச்சராக தெலுங்கு தேசம் கட்சியின் 36 வயதான ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு  இடம் பெற்றுள்ளார். இவரது தந்தை 39 வயதில் மத்திய அமைச்சரான எர்ரான் நாயுடு என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் 5700 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியான தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரசேகர் பெம்மசானியும் தற்போதைய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். இவர் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Details of PM Modis 3rd Ministry


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->