தருமபுரி சம்பவம்: மானங்கெட்ட கேவலமான வேலை! கொந்தளித்த தங்கர்பச்சான்! - Seithipunal
Seithipunal


நேற்று தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆதனூர் உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த சுமார் 20 பேர் கொண்ட ஒரு குழு, ஆதனூர் பகுதியில் புதிய டாஸ்மார்க் மது கடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

அதே சமயத்தில், அதே ஆதனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள், ஆதனூர் பகுதியில் டாஸ்மார்க் கடை அமைக்க கூடாது என்றும், சிலர் வேண்டுமென்றே டாஸ்மார்க் கடை அமைக்க பொய்யான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு மனு ஒன்று அளித்தனர்.

இந்த நிலையில், நேற்று டாஸ்மாக் மதுகடை வேண்டுமென்று மனு கொடுத்தவர்களில் பெண் ஒருவர், தங்களை ஒரு சிலர் காசு கொடுத்து அழைத்து சென்றதாகவும், மது கடை வேண்டாம் என்பதற்காகத் தான் அழைத்து சென்றதாகவும், ஆனால் அங்கு எங்களை மாற்றி பேச சொல்லி அவர்கள் கட்டாயப்படுத்தியதாகவும் அந்த பெண் பேட்டி அளித்துள்ளார். 

இது குறித்த காணொளியை பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் பாலு மற்றும் இயக்குனர் தங்கர்பச்சான் உள்ளிட்டவர்கள் வெளியிட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தங்களது கண்டனத்தை கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். 

குறிப்பாக இயக்குனர் தங்கர்பச்சான் தனது சமூக வலைத்தள பதிவில், போராட்டங்களுக்கு கூலிக்கு ஆட்களை பிடித்து வந்து அரசியல் பிழைப்பு நடத்தும் மானங்கெட்ட கேவலமான வேலையைச் செய்பவர்கள் குறித்து என்ன சொல்ல? அரசியல் என்பதை ஒரு வருமானம் தரும் தொழிலாக மாற்றி
மக்களிடம் மதுவைத் திணிப்பதையே முதல் பணியாக செய்பவர்கள் பெரியார் அண்ணா குறித்துப் பேசலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dharmapuri villagers Tasmac liquor shop issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->