75 ஆண்டுகளை நிறைவு செய்யும் திமுக!....திராவிட மாடல் இந்திய மாநிலங்கள் பின்பற்றும் கோட்பாடு-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்! - Seithipunal
Seithipunal


முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திராவிட முன்னேற்றக் கழகம் . இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலக் கட்சி, முக்கால் நூற்றாண்டு காலத்தைக் கடந்து, மக்களின் பேராதரவுடன் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதுடன், இந்திய அளவில் கொள்கை வலிமைமிக்க தாக்கங்களை ஏற்படுத்தக் கூடிய இயக்கமாகவும் திகழ்கிறதென்றால், அது திராவிட முன்னேற்றக் கழகம்தான்.

செப்டம்பர் 15  பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள், செப்டம்பர் 17 - பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாள். அதே நாள்தான், திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பேரியக்கம் தொடங்கப்பட்ட நாள். இந்த மூன்றையும் இணைத்து, முப்பெரும் விழா என்று பெயர்சூட்டி திராவிடத் திருவிழாவாகக் கொண்டாடும் வழக்கத்தை உருவாக்கியவர் நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர். 

75 ஆண்டுகள் கழித்து, வருகிற 17-ம் தேதி தென்சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழா நிறைவுப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த 75 ஆண்டுகாலத்தில், தெற்குதான் வடக்கிற்கு வழிகாட்டுகிறது என்ற அளவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைத் தாக்கம் நாடு முழுவதும் பேசப்படுகிறது. திராவிட மாடல் என்பது இந்திய மாநிலங்கள் பின்பற்றும் கோட்பாடாக மாறியிருக்கிறது.

வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’ என்ற நிலையில் தமிழ்நாட்டின் உரிமைகளையும் தமிழர்களின் வாழ்வையும் காக்கப் பேரறிஞர் அண்ணா தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகம், ‘தெற்குதான் வடக்கிற்கு வழிகாட்டுகிறது’ என்ற தாக்கத்தை இன்று ஏற்படுத்தியிருக்கிறது!

நமது வெற்றிப் பயணம் தொடர்ந்திட வரும் 17-ஆம் நாள் வரலாற்றுப் பெருவிழாவான கழகத்தின் பவள விழாவில் படையெனத் திரண்டு, கொண்டாடி மகிழ்வோம். இது எனது அழைப்பு மட்டுமல்ல; பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும் அழைக்கிறார்கள்! அணி திரள்வோம்! பணி தொடர்வோம்! என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK completes 75 years Dravida model principle followed by Indian states chief Minister MK Stalin pride


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->