அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் - உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்பு..!! - Seithipunal
Seithipunal


வரும் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. இந்தக் குழுவில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே. என். நேரு, தங்கம் தென்னரசு, எ. வ.வேலு, ஆர். எஸ். பாரதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

இந்த தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு திமுகவில் மேற்கொள்ள வேண்டிய உட்கட்டமைப்பு மாறுதல்கள் குறித்தும், அமைப்பு ரீதியான சீரமைப்புகள் குறித்தும் கட்சித் தலைமைக்கு ஆலோசனை வழங்கும் என்று தெரிய வந்துள்ளது. 

திமுகவின் சட்டமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு குறித்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அவர் அந்த அறிக்கையில், "வரும் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்காக திமுகவில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப் பட்டுள்ளது. 

இந்த குழுவில் அமைச்சர்கள் கே. என். நேரு, ஆர். எஸ். பாரதி, உதயநிதி, எ. வ. வேலு, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்த ஒருங்கிணைப்புக் குழு திமுகவின் உட்கட்டமைப்பில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள், மற்றும் அமைப்பு ரீதியிலான சீரமைப்புகள் குறித்து கட்சித் தலைமைக்கு ஆலேசனை வழங்கும்" என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் அறிவித்த அமைச்சர்கள் அடங்கிய குழு ஆலோசனை நடத்தி வருகிறது. 

இதையடுத்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் என்னென்ன விவாதிக்கப் பட்டது என்ற தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Election CoOrdination Committee Meeting Started in Anna Arivalayam


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->