இத்தனை நாள் வாயே திறக்காதவர்கள் வாயில் இருந்து வந்த வாழ்த்து... மத்திய அமைச்சர் அளித்த பரபரப்பு பேட்டி!
DMK MKS Stalin Uday Nidhi Diwali wishing BJP central minister
இந்து மக்களின் பிரதான பண்டிகைகளின் முக்கியத்துவம் வாய்ந்ததும், உச்சகட்டமாக கொண்டாடப்படுவதும் தீபாவளி பண்டிகையாகும்.
இந்து மக்கள் மட்டுமல்ல உலகில் வாழக்கூடிய பல்வேறு மதத்தை சேர்ந்தவர்களும் தீபாவளியை இந்து மக்களோடு சேர்ந்து முன்னாடி வருகின்றனர்.
பல நாடுகளை சேர்ந்த பிரதமர்கள் அதிபர்கள் குடியரசு தலைவர்களும் இந்து மக்களுக்கு இந்த தீபாவளி அன்று வாழ்த்துக்கள் தெரிவித்து இனிப்புகளை பகிர்ந்து தீபம் ஏற்றி அவர்களும் கொண்டாடி வருகின்றனர்.
ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் எந்த தீபாவளி பண்டிகைக்கும் இதுவரை வாழ்த்த தெரிவித்தது இல்லை. தற்போது முதலமைச்சராக இருக்கின்ற பொழுதும் அவர் தீபாவளிக்கு இதுவரை வாழ்த்து தெரிவிக்கவில்லை.
இந்த வருட தீபாவளிக்கு திடீர் திருப்பமாக ஸ்டாலினின் மகனும் துணை முதலமைச்சர் ஆன உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை உள்ள அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் என்று தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. சனாதனத்தை ஒழிப்பேன் என்ற சூழலைத்த உதயநிதி வாயில் இருந்து தீபாவளிக்கு வாழ்த்து வந்திருப்பது என்பது சாதாரண விஷயமாக அரசியல் விமர்சகர் பார்க்கவில்லை.
இதற்குப் பின்னணியில் பாஜகவின் நெருக்கடி இருப்பதாகவே கருதுகின்றனர். பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் உதயநிதியின் இந்த வாழ்த்து செய்தியை திமுக பாஜக இடையேயான கள்ளக் கூட்டணியை அம்பலப்படுத்தி உள்ளதாக விமர்சனம் செய்துள்ளனர்.
இந்த நிலையில், பாஜகவை சேர்ந்தவரும் மத்திய இணை அமைச்சருமான எல் முருகன் என்ற செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், தீபாவளிக்கு இத்தனை நாள் வாயே திறக்காதவர்கள் தற்போது வாழ்த்து சொல்கிறார்கள்.
முதலமைச்சர் ஸ்டாலினும் வாழ்த்து சொல்வார் என்று எதிர்பார்க்கிறேன். தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில் என்ன தயக்கம். அனைத்து திருவிழாக்களுக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும்" என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
English Summary
DMK MKS Stalin Uday Nidhi Diwali wishing BJP central minister