தமிழகத்தில் திமுக எம். பி. க்கள் கூட்டம்.. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது!
DMK MP Meeting in TamilNadu Held in CM M K Stalin Leadership
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடந்தது. இதையடுத்து ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின.
இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின் ஜூன் 4ம் தேதி இரவே கூட்டணி கட்சிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
![](https://img.seithipunal.com/media/j7.13.1-5qag3.png)
இதையடுத்து நேற்று ஜூன் 6ம் தேதி மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம். பி.க்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து வெற்றி பெற்ற திமுக எம்.பி. க்களின் கூட்டம் நாளை மாலை 6.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி. க்கள் அனைவரும் மக்களவையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றும், மேலும் மக்களவையில் அவர்களது பணி குறித்தும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவுறுத்துவார் என்று தெரிய வந்துள்ளது.
English Summary
DMK MP Meeting in TamilNadu Held in CM M K Stalin Leadership