உங்களுக்கு இயற்கை, ட்ரெக்கிங் பிடிக்குமா?...இதோ தமிழக அரசு தொடங்கி வைத்த மெகா பிளான்! - Seithipunal
Seithipunal


அரசின் துணையோடு மலையேற்றப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான தமிழ்நாடு மலையேற்ற திட்டத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அரிக்கியில், தமிழ்நாட்டின் இயற்கை எழில் கொஞ்சும் மலைகள் – வனங்கள் ஆகியவற்றில், அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் அரசின் துணையோடு மலையேற்றப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான தமிழ்நாடு மலையேற்ற திட்டத்தையும், https://trektamilnadu.com என்ற இணையதளத்தையும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
அவர்களின் உத்தரவின்பேரில் தலைமைச் செயலகத்தில் இன்றைய தினம் தொடங்கி வைத்தோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மலையேற்றத்திற்கு துணை நிற்கும் வனத்துறையின் வழிகாட்டிகளுக்கு தேவையான சீருடைகள், மலையேற்ற காலணிகள், தொப்பி, முதலுதவி பெட்டி, சூடான தண்ணீர் குடுவை, குச்சி, ஜி.பி.எஸ் கருவி உள்ளிட்ட மலையேற்ற உபகரணங்களை வழங்கினோம்.

இயற்கையின் மீது பிரியம் கொண்டோர், நம் அரசின் துணையோடு மலையேற்ற அனுபவத்தை பெற்றிட, இப்புதிய முன்னெடுப்பு நிச்சயம் உதவும். இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள என் அன்பும், வாழ்த்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do you like nature and trekking the mega plan launched by the tamil government


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->