தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்த பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.!  - Seithipunal
Seithipunal


இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நேரில் சந்தித்து உள்ளார்.

இன்று மாலை நடந்த இந்த சந்திப்பு குறித்து பாமக தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

"பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள், இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுனர் திரு. ஆர்.என். ரவி அவர்களை சந்தித்து வாழ்த்துப்பெற்றார். 

தொடர்வண்டித்துறையின் முன்னாள் இணை அமைச்சரும், பாமக தேர்தல் பணிக்குழு தலைவருமான ஏ.கே. மூர்த்தி, பாமக செய்தித்தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு ஆகியோர் உடன் இருந்தனர்"

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட மருத்துவர் அன்புமணி இராமதாஸ், தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Meet TN Governor RN Ravi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->