மின்சார இரு சக்கர ஊர்திகளை கையாள்வதில் கவனமும், எச்சரிக்கையும் தேவை - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிவுரை.! - Seithipunal
Seithipunal


பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "வேலூர் சின்ன அல்லாபுரம் பகுதியில் மின்சார இருசக்கர ஊர்தி வெடித்ததால் வீட்டிற்குள் ஏற்பட்ட புகை மூட்டத்தில் சிக்கி தந்தை துரைவர்மா, 13 வயது மகள் பிரீத்தி  ஆகியோர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன். அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலும், அனுதாபங்களும்.

மின்சார இரு சக்கர ஊர்தியை சார்ஜரில் இணைத்து விட்டு உறங்கியதால், அதிக மின்சக்தி ஏறியவுடன் அதை தாங்க முடியாமல் பேட்டரி வெடித்தது தான் விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. காவல்துறை விசாரணையின் முடிவில் தான் இதை உறுதி செய்ய இயலும்!

மின்சார இரு சக்கர ஊர்தியும், அதில் மின்னேற்றம் செய்வதும் தமிழகத்திற்கு புதிய தொழில்நுட்பம் ஆகும். அத்தொழில்நுட்பத்தை அனைவரும் பழகும் வரை மின்னூர்திகளை இயக்குவது, மின்னேற்றம் செய்வதில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இதுகுறித்து அரசும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say About Electric Scooter Accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->