திருச்சி சிறப்பு முகாமிலிருந்து 16 அகதிகள்  விடுதலை : பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வரவேற்பு.! - Seithipunal
Seithipunal


திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகள் 16 பேரை தமிழக அரசு  விடுதலை செய்திருப்பதற்கு, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகள் 16 பேரை தமிழக அரசு  விடுதலை செய்திருக்கிறது.  பல வாரங்களாக  உண்ணாநிலை, போராட்டம்  ஆகியவற்றில் ஈடுபட்டு வந்த அவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது!

சிறப்பு முகாம் அகதிகள் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. எந்த வழக்கும் நிலுவையில் இல்லை என்ற அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கடந்த ஜூன் ஒன்றாம் தேதி வலியுறுத்தியிருந்தேன். பா.ம.க.வின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

விடுதலை செய்யப்பட்ட அகதிகள் தாயகம் திரும்பவோ, தமிழகத்தில் வாழவோ விரும்பினால் அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். பொருளாதார நெருக்கடியால் தமிழ்நாட்டுக்கு வந்தவர்களையும்  அகதிகளாக அறிவித்து உதவ  அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும்" என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Wish For TNGovt Order July


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->