விழிப்புடன் இருந்திருந்தால் இதை தவிர்த்திருக்கலாம்., தமிழக அரசுக்கு எடுத்துரைக்கும் மருத்துவர் இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


விமான நிலையத்திலிருந்து  எந்த சோதனைக்கும் உட்படுத்தப்படாமல் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், இனியாவது ஓமைக்ரான் வைரஸ் சோதனையில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்றும், தமிழக அரசுக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், "தமிழ்நாட்டில் ஓமைக்ரான் வை கொரோனா உறுதி செய்யப்பட்டவர் நைஜீரியாவிலிருந்து சென்னைக்கு வந்த போது விமான நிலையத்திலிருந்து  எந்த சோதனைக்கும் உட்படுத்தப்படாமல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்று ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் கவலையளிக்கின்றன.

அவருக்கு பல நாட்களுக்கு பிறகு தான் ஓமைக்ரான் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதற்கு முன்பாக  அவருடன் தொடர்பில் இருந்த  52 பேர் உட்பட  280 பேர் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். விழிப்புடன் இருந்திருந்தால் இதை தவிர்த்திருக்கலாம்!

இனி வரும் நாட்களிலாவது சென்னைக்கு வரும் விமானப் பயணிகள் எந்த நாட்டிலிருந்து பயணத்தை தொடங்குகிறார்கள் என்பதை ஆராய்ந்து, அவர்கள் அனைவருக்கும்  கொரோனா சோதனையை கட்டாயமாக்க வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DrRamadoss Say About Omicron Test in Airport


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->