மேகதாது விவகாரம்.. சட்டமன்றத்தில் தனித் தீர்மானம்.!! - Seithipunal
Seithipunal


கடந்த 18ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அன்றைய தினம் தமிழக பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த நாளான 19ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை அடுத்து பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடியது. 

இன்று பொது பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். 

இந்நிலையில், மேகதாது அணைக்கு எதிராக சட்டப் பேரவையில் தீர்மானத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்மொழிந்தார். அதன்பிறகு தீர்மானம் குறித்து அவர் பேசியதாவது, என்று முடியும் காவிரி போராட்டம்? என வேதனை தெரிவித்தார். காவிரி பிரச்சினை மகன், பேரன், கொள்ளுப்பேரன் வரை போகுமோ என்ற சந்தேகம் நிலவுகிறது.

கர்நாடகாவில் எந்த கட்சியாக இருந்தாலும் ஒரே அணியாக உள்ளது. அதிமுக தீர்மானம் கொண்டுவந்தபோது எல்லாம் திமுக ஆதரவு அளித்தது. திமுகவுக்கு அதிமுக ஆதரவு அளித்தது. உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும் என தீர்ப்பு வழங்கிய பிறகும் கர்நாடகா அணை கட்ட முயற்சிக்கிறது. 

மேகதாது விவகாரத்தில் தோற்றுப்போனால் எதிர்கால சமூகம் நம்மை சபிக்கும். தமிழக சட்டப்பேரவை கர்நாடக அரசின் செயலுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்கிறது. மேகதாதுவில் அணை கட்ட எந்தவித அனுமதியும் மத்திய அரசு கொடுக்கக்கூடாது. காவிரி பிரச்சினையில் நான் என்ன செய்தேன். நீ என்ன செய்தாய் என்ற வாதத்தை விட்டு விடுவோம் எனக் கூறி தீர்மானத்தை கொண்டுவந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

duraimurugan says about mekedtu dam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->