இடைக்கால பொதுச்செயலாளர் தீர்மானம் : விரைவில் மனுதாக்கல்., வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, தேர்தல் ஆணைய அதிகாரிகள் பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுகவின் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த ஆவணங்களை, எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து தேர்தல் ஆணையத்திற்கு மனுவாக அனுப்பப்பட்டுள்ளது. 

இந்த ஆவணங்களின் மீதான பரிசீலனை தற்போது நடத்திக் கொண்டிருக்கிறது. அதிமுக பொறுப்பாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் எந்த தரப்பில் இருக்கிறார்கள். 

அதே சமயத்தில் ஓ பன்னீர்செல்வம் கொடுத்த புகார் குறித்தும் தேர்தல் அதிகாரிகள் பரிசீலனை செய்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இடைக்கால பொதுச்செயலாளர் தீர்மானத்தை அங்கீகரித்தது தொடர்பான மனுவை தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி தரப்பு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

உறுப்பினர்களின் கையொப்பம் அடங்கிய மனுக்களை, இந்திய தேர்தல் ஆணையத்தில் விரைவில் ஈபிஎஸ் தரப்பு சமர்பிக்க உள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தில் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களின் ஒப்புதலோடு விரைவில் எடப்பாடி தரப்பு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EdappadiPalaniswami ElectionCommission


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->