அதிரடி!!!அமித்ஷாவிடம் 4 நிபந்தனங்களை வைத்த EPS...!!! அண்ணாமலைக்கு No சொல்ல காரணம் என்ன?
EPS 4 conditions on Amit Shah reason for saying no Annamalai
டெல்லியில் நேற்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,நேரில் அவரது வீட்டில் சந்தித்து உரையாடினார். அதன்பிறகு, பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழி கொள்கை விவகாரம் குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாக தெரியவந்துள்ளது.

பிறகு சென்னை வந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "அமித்ஷாவுடன் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. மக்களின் பிரச்சனையை பேசதான் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தோம். தேர்தல் நெருங்கும்போது தான் கூட்டணி குறித்து பேசுவோம்" என்று தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி:
இந்த நிலையில், பா.ஜ.க. கூட்டணி அமைய பல்வேறு நிபந்தனைகளை எடப்பாடி பழனிசாமி விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அந்த விதிகளில்," 1 .தமிழகத்தில் 2026 தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி.
2 .அண்ணாமலையை பா.ஜ.க. மாநில தலைவர் பொறுப்பில் இருந்து விலக்க வேண்டும்.
3 .தொகுதி ஒதுக்கீடு தொடர்பான முடிவை அ.தி.மு.க.தான் எடுக்கும்.
4 .ஓ.பி.எஸ். டி.டி.வி., சசிகலா கூட்டணியில் இடம் பெறக்கூடாது"
என்பது போன்ற நிபந்தனைகளை எடப்பாடி பழனிசாமி விதித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.இது தற்போது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
English Summary
EPS 4 conditions on Amit Shah reason for saying no Annamalai