ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக ஒன்றிய செயலாளர் உயிரிழப்பு.!
Erode admk Volunteer died In Campaign
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா கடந்த டிசம்பர் 4ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து வரும் பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புனு தாக்கல் மற்றும் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.
இறுதியாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 75 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு போட்டியிடுகிறார்.
அதன் அடிப்படையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 75 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனையடுத்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.
இதனையடுத்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது அதிமுக நிர்வாகி நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பெயர் கந்தன். இவர் பண்ருட்டியில் உள்ள அண்ணா கிராமம் பகுதியில் அதிமுக ஒன்றிய செயலாளராக இருந்தார்.
English Summary
Erode admk Volunteer died In Campaign