ஈரோடு இடைத்தேர்தல் | களமிறங்கும் ஓபிஎஸ் அணி?!
erode East ByElelction OPS side
தமிழகத்தின் பிரபல தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவிக்கையில், "முன்னாள் முதல்வர், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஆணையிட்டால், ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் நிற்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இரட்டை இலை சின்னத்தில் தான் நாங்கள் போட்டியிடுவோம். இரட்டை இலை சின்னம் எங்களுடன் தான் உள்ளது. அதன் உரிமையாளர் ஓ பன்னீர்செல்வம் தான் இருக்கிறார்" என்றார்.
அப்போது செய்தியாளர், இன்னும் அதிமுக பொதுகுழு வழக்கில் தீர்ப்பு வெளியாகவில்லை. எப்படி நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த புகழேந்தி, உச்சநீதிமன்ற வழக்கை பொறுத்தவரை அதிமுகவின் சின்னத்திற்கும், வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த வழக்கு என்பது இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட சம்பந்தமான வழக்கு மட்டும்தான்.
தேர்தல் ஆணையத்தை பொருத்தவரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் தான் இருக்கிறார் என்பதை உறுதி செய்துள்ளது. மேலும் இரட்டை இலை சின்னத்தின் உரிமையாளராக ஓபிஎஸ்ஐ தான் தேர்தல் ஆணையம் பார்க்கும்.
எனவே இரட்டை இலை சின்னம் எங்களிடம் தான் உள்ளது. ஓ பன்னீர்செல்வம் சொன்னால் ஈரோடு கிழக்கு தொகுதியில் எங்களுடைய வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய களமிறங்குவோம்.
எண்கள் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறுவார். இது குறித்த முடிவு எடுக்கக்கூடிய ஒரே நபர் ஓபிஎஸ் மட்டும்தான்" என்று புகழேந்தி தெரிவித்தார்.
English Summary
erode East ByElelction OPS side