#BigBreaking | ஈரோடு இடைத்தேர்தல் - அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த திமுக எம்.பி! - Seithipunal
Seithipunal



ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு களமிறக்க அனைத்து பணிகளும் நடந்து வருகிறது.

உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுபடியே, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு முறையாக கடிதம் அனுப்பி ஒப்புதல் பெரும் பணியை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் இன்று இரவுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளார்.

நாளை தேர்தல் ஆணையத்திடம் வேட்பாளர் ஆதரவு கடிதம் வழங்கப்பட்டு, நாளை மறுநாள் அதிமுக வேட்பாளர் மனு தாக்கல் செய்ய உள்ளார்.

இதற்கிடையே அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்த்தித்து பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், சங்கங்களும் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், பாஜக தோழமைக் கட்சியான அதிமுகவுக்கு ஆதரவளிப்போம் என்று, திமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாரிவேந்தர் எம்பி தெரிவித்துள்ளார்.

இவர் மகன் நடத்தும் கட்சியான 'இந்திய ஜனநாயக கட்சி'யின் நிறுவனர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode Election ADMK More support info


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->