அடங்கிய நெல்லை.. கிளம்பிய கடலூர்.. மாநகராட்சி கூட்டத்தில் களேபரம்.!!
excitement in Cuddalore Corporation meeting
கடலூர் மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் மேயர் சுந்தரி ராஜா தலைமையில் நடைபெற்ற போது திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்களில் ஒரு பிரிவினர் மேயரிடமும், மற்றொரு பிரிவினர் ஆணையரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் அடிப்படை கட்டமைப்புகளை இல்லை என அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாநகராட்சியில் தேவையான ஊழியர்கள் இல்லாததால் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுவதாக மாநகராட்சி விளக்கம் அளித்தும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாமன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பாமக பெண் கவுன்சிலர் தனது வார்டு குடிநீர் பிரச்சனை, விளக்கு பிரச்சனை இருப்பதால் இரவு நேரங்களில் சமூகவிரோத செயல்கள் அரங்கேறி வருகிறது. இதற்கு கடலூர் மாநகராட்சி ஆணையர் தகுந்த பதில் அளிக்க வேண்டும் என மாமன்ற கூட்டத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவரை தொடர்ந்து பாஜக கவுன்சிலர்களும் தங்கள் வார்டில் எந்த அடிப்படை வசதியும் மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டினர். ஆளுங்கட்சியான திமுகவை சேர்ந்த கவுன்சிலர்களும் இரு பிரிவுகளாக செயல்படுவதால் மாமன்ற கூட்டத்தில் பதற்றமான சூழல் நிலவியது. நெல்லை மாநகராட்சி மேயர் விவகாரம் சற்று ஓய்ந்த நிலையில் தற்போது கடலூர் மாநகராட்சியில் கிளம்பியுள்ள பிரச்சனை திமுகவில் புயலை கிளப்பியுள்ளது.
English Summary
excitement in Cuddalore Corporation meeting