ஆளுநர் - ஆளும் கட்சியிடையே கடும் மோதல்.. #GetOutRavi என்ற வசனத்துடன் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு.!
Getoutravi posters in Chennai
தமிழக அரசின் 2023 ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
தமிழக அரசால் வழங்கப்பட்ட உரையில் சில பகுதிகளை ஆளுநர் ஆர்.என் ரவி வாசிக்காமல் தவிர்த்தார். இதனை கண்டிக்கும் வகையில் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ள அனைத்து வாக்கியங்களையும் அவை குறிப்பில் சேர்க்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானத்தை ஸ்டாலின் வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது அவையில் இருந்து ஆளுநர் ஆர்.என் ரவி வெளியேறினார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
இந்த நிலையில் ஆளுநரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் செம்மொழி பூங்கா, அண்ணா அறிவாலயம் ஆகிய இடங்களில் திமுகவினர் #GetOutRavi என்ற வாசகத்துடன் போஸ்டர் ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை விமர்சிக்கும் வகையில் "இந்த நாட்டிலையே ஏன் வேர்ல்டுலையே அசம்பிளிய விட்டு ஓடிப்போன ஓடுகாலி கவர்னர் நம்ம ரம்மி ரெவி தான்" என பதிவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
Getoutravi posters in Chennai