நான் என்ன பேசுகிறேனோ அதை மோடி காப்பி அடித்து பேசுகிறார் - ராகுல் காந்தி!!
I am talking modi copy talking Rahul Gandhi
இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள 7 கட்டங்களில் 4 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது. ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகியுள்ளது. மக்களவைத் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், முன்னாள் தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி நாடாளுமன்ற தொகுதியில் பரப்பரை மேற்கொண்டார்.
மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ராகுல் காந்தி பேசுகையில், தேர்தல் பரப்புரையில் நான் என்னவெல்லாம் பேசுகிறோமோ அதை அப்படியே மோடி பேசுகிறார். சமீபத்தில் பிரச்சாரத்தில் நான் அதானி,அம்பானி பெயர்களை மோடியால் சொல்ல முடியாது என்று கூறினேன். இரண்டு நாள் கழித்து மோடி அதானி, அம்பானியை பற்றி பேசினார். நான் என்ன பேசுகிறேனோ அதை மோடி அப்படியே காப்பி அடித்து பேசுகிறார் என்று கூறினார்.
English Summary
I am talking modi copy talking Rahul Gandhi