குலுக்கல் முறையில் பரிசு - யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - இந்திய தபால் துறை விடுத்த எச்சரிக்கை.!
indian post office warning announce
குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வரும் போலியான யுஆர்எல்-களை (URL - link) நம்ப வேண்டாம் என்று இந்திய தபால் துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து இந்திய தபால் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"சமூக வலைத்தளங்களில் மின்னஞ்சல்கள் மற்றும் குறுந்தகவல்கள் மூலமாக பரிசுகள் வழங்கப்படுவதாக யுஆர்எல்-கள் பரவி வருவதை கண்காணித்து வருகிறோம்.
இந்திய தபால்துறை பெயரில் இந்த போலியான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இந்திய தபால் துறை இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
இது போன்று சமூக வலைதளங்களில் வரும் போலியான தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். இதனை நம்பி வங்கி கணக்கு, ஓடிபி எண் போன்ற தகவல்களை பகிர வேண்டாம்.
இதுபோன்று போலி தகவல்களை பரப்பி வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது". என்று இந்திய தபால் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
indian post office warning announce