உ.பியில் சோகம் - சிறுத்தை கடித்து பெண் பலி..!
women died for bite leopard
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிஜ்னோர் மாவட்டத்தில் பெண் ஒருவர் காட்டுப்பகுதியில் தனது கால்நடைகளுக்கு தீவனம் சேகரித்து கொண்டிருந்த போது சிறுத்தை கடித்து கொன்றதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:- "சவுதேரி கிராமத்தை சேர்ந்த சுமன் என்ற பெண் நேற்று மாலை காட்டிற்கு சென்று திரும்பி வரவில்லை என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து அவரை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு ஒரு வயலில் அவரது பகுதியளவு உண்ணப்பட்ட உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த உடலை கைப்பற்றிய அதிகாரிகள் அதை பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடி வருகின்றனர் என்றுத் தெரிவித்தார்.
English Summary
women died for bite leopard