இட ஒதுக்கீட்டிற்கு எதிரான "பாஜகவுடன் கூட்டணியா?".!! நாயுடுவை ரவுண்டு கட்டிய ரெட்டி.!! - Seithipunal
Seithipunal


மக்களவை பொதுத் தர்தலுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்களை 96 தொகுதிகளுக்கு வரும் மே 13ஆம் தேதி நடைபெறுகிறது. நாடாளுமன்ற மக்களவைப் போது தேர்தலுடன் ஆந்திர மாநிலத்திற்கான சட்டப்பேரவை பொது தேர்தலும் நடைபெறுகிறது. 

ஆந்திர மாநில சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவும் வரும் மே 13ஆம் தேதி நடைபெற உள்ளதால் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது.

ஆந்திரா ஆளும் ஒய்.எஸ்‌ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி மற்றும் காங்கிரஸ் என முனை போட்டி நிலவுகிறது. இதனால் ஆந்திராவில் அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார் என்ற கேள்வி எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் தற்போதைய ஆந்திர முதலமைச்சருமான ஜெகன்மோகன் ரெட்டி முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர் இஸ்லாமியர்களுக்கான நான்கு சதவீதம் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதாக கூறும் பாஜகவுடன் கூட்டணியில் இருந்து கொண்டு நான் சிறுபான்மையினரின் நண்பன் என சந்திரபாபு நாயுடு கூறி வருகிறார். 

ஆனால் ஆந்திராவில் ஒஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நான்கு சதவீத இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீடு தொடரும் என கூறியுள்ளார். மக்களவை பொது தேர்தலைப் போன்றே ஆந்திர மாநில பொதுத் தேர்தலும் இட ஒதுக்கீடு விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jaganmohan ask Chandrababu why alliance with BJP


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->