ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் - மத்திய அமைச்சர் அமித்ஷா! - Seithipunal
Seithipunal


ஜம்மு-காஷ்மீரில் இந்த மாதம் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக  வரும் செப்டம்பர் 18ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் செப்டம்பர் 25ம் தேதியும், 3ம் கட்ட தேர்தல் அக்டோபர் 1ம் தேதி வரை என 3 கட்டங்களாக நடைபெற உள்ளது.

மேலும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கிடையே  பா.ஜ.க தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று வெளியிட்ட நிலையில், இன்று  காஷ்மீரில் பாஜக  தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது, எந்த சமூகத்திற்கும் அநீதி இழைக்க தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் அனுமதிக்காது என்றும், யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாத சம்பவங்களை அரசாங்கம் 70 சதவீதம் குறைத்துள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் சட்டசபை தேர்தலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று கூறிய அவர், தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸால் ஒருபோதும் காஷ்மீரில் ஆட்சி அமைக்க முடியாது என்றும், அடுத்த அரசாங்கத்தை அமைக்க பாஜக வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யுங்கள் என்று கூறினார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jammu and Kashmir will be given statehood Union Minister Amit Shah


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->