படுகர் இனத்தை "ST பிரிவில்" சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பேன் - எல்.முருகன் உறுதி
LMurugan promise he will take steps to include Padukhar tribe in ST category
நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும் மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் நீலகிரி தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டுள்ளார்.
அதன்படி,
1) உதகையில் திரைப்பட படப்பிடிப்பு பிந்தைய தயாரிப்பு பணிகளுக்கான திரைப்பட நகரம் அமைப்பதோடு, உலக திரைப்பட விழாக்கள் நடத்தப்படும்.
2) உதகையில் சர்வதேச தரத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் உருவாக்கப்படும்.

3) உதகை காந்தல் பகுதியில் விளையாட்டு மைதானம் அமைத்து தரப்படும்.
4) நீலகிரி மாவட்ட மக்களுக்கான வேலைவாய்ப்பினை உறுதி செய்யும் விதமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள HPF தொழிற்சாலையானது நவீன தொழிற்சாலை பூங்காவாக அமைத்து தரப்படும்.
5) மேட்டுப்பாளையம் கோவை ரயில் இருப்புப் பாதை இரட்டை வழி பாதையாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

6) உதகை நகர் பகுதியில் சுற்றுலா வாகனங்களுக்கு மல்டி லெவல் பார்க்கிங் வசதி செய்து தரப்படும்
7) நிலக்கடலை, பாக்கு மற்றும் செங்காம்பு கறிவேப்பிலைகளுக்கு புவிசார் குறியீடு பெற்று ஏற்றுமதியை ஊக்குவித்து, உரிய விலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
8) படுகர் இன மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான எஸ்டி இன பட்டியலில் சேட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார் எல்.முருகன்.
English Summary
LMurugan promise he will take steps to include Padukhar tribe in ST category