அதிமுகவின் முடிவால் உற்சாகத்தில் திமுகவினர்.. இன்று வெளியாகப் போகும் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு ஜூலை 9ஆம் தேதி தற்செயல் தேர்தல் நடைபெறும் என தமிழக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. 510 பதவியிடங்களில், 34 பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது. 

உள்ளாட்சி அமைப்புகளில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அனைத்து பதவிகளுக்கும் கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெற உள்ளது. 

கட்சி சின்னத்தில் வேட்பளர்கள் போட்டியிடவேண்டும் என்றால் Form A , Form B ஆகிய படிவங்களில் கட்சி தலைமை கையொப்பமிட்டு, தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், அதிமுகவின் இதுவரை அந்த படிவங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. இன்று மாலைக்குள் வேட்பாளர்கள் எந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்பது வெளியிடப்படும். 

நேற்று உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அனுப்பிய கடிதத்தை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பெறவில்லை. இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிட ஏதுவாக படிவங்களை அனுப்ப ஓபிஎஸ் கடிதம் எழுதி இருந்தார். இதனை இபிஎஸ் பெறாததால், 34 கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்பதால் மாநகராட்சி, மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. வேட்புமனு படிவத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் கையெழுத்திடாததால் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இதனால் திமுக வேட்பாளர்களின் வெற்றிய பிரகாசமாக உள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

local body election admk candidate issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->