திரிணாமுல் முடிவால் மஹுவா மொய்த்ரா எம்.பிக்கு ஷாக்!
Mahua Moitra MP shocked by Tmc decision
நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு எதிராக கேள்வி எழுப்ப திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கியதாக பாஜகவைச் சேர்ந்த நிஷிகாந்த் துபே புகார் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் மீது விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பாஜகவைச் சேர்ந்த வினோத்குமார் சோன்கர் தலைமையிலான மக்களவை ஒழுங்கு நடவடிக்கை குழுவின் ஆய்வுக்கு பரிந்துரை செய்தார்.
இந்த பரிந்துரையின் அடிப்படையில் வரும் அக்டோபர் 26 ஆம் தேதி ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்த உள்ளது. இந்த நிலையில் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் தான் பதில் அளிக்க வேண்டுமே தவிர, கட்சி பதில் அளிக்க்காது என கூறி இந்த விவகாரத்தில் இருந்து விலகி நிற்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருப்பது அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ராவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Mahua Moitra MP shocked by Tmc decision