அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை இல்லை - அந்தர் பல்டி அடித்த அமைச்சர்! - Seithipunal
Seithipunal


விருதுநகர், கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் ரூ.17.19 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடத்தை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், "முதியோர் உதவித் தொகைக்கு விண்ணப்பித்து ஆணை பெற்றுள்ளவர்களுக்கும் முதியோர் உதவித் தொகை வழங்கப்படும். வரும் 2025 ஜனவரி முதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கப்படும். நீங்கள் விண்ணப்பிக்கக்கூட வேண்டாம். தகுதிகளை நீக்கிவிடுவோம்" என்று தெரிவித்து இருந்தார்.

இதனை நம்பி பல்வேறு செய்தி ஊடகங்களும் அனைவருக்கும் மகளிர் உதவி தொகை என்று செய்தி வெளியிட்டு இருந்தன.

இந்நிலையில், அனைவருக்கும் கிடையாது, தகுதி உள்ள அனைவருக்கும் என்று அமைச்சர் பல்டி அடித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு தங்களுடைய ரேஷன் கார்டு அடிப்படையில் விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ளவர்களில் ஒருவர் கூட விடுபடாத அளவில் வழங்கிட வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் இலக்காகும். 

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதியுள்ள அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என இன்று விருதுநகர் மாவட்ட நிகழ்ச்சியில் மக்களிடம் உறுதியளித்தேன்" என்று தெரிவித்துள்ளார். இல்லை, இல்லை தெளிவுபடுத்தியுள்ளார். 



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

makalir urimai thokai issue DMK MK Stalin Govt


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->