நடிகை கஸ்தூரி விவகாரம்!....தேடுதல் பணியில் தனிப்படைகள் தீவிரம்! - Seithipunal
Seithipunal


சென்னை எழும்பூரில் பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், 300 ஆண்டுகளுக்கு முன்பு ராஜாவுக்கு அந்தப்புரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் எல்லாம், தெலுங்கு பேசுபவர்கள் எல்லாம் இன்று வந்து தமிழர்கள் என்று கூறும் போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு நீங்க யாருங்க தமிழர்கள் என்று பேசினார்.

கஸ்தூரியின் இந்த பேச்சிற்கு திமுக சார்பில் ஆ.ராசா கடும் கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து கஸ்தூரி மீது அவதூறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை திருநகர் காவல் நிலையத்தில் நாயுடு மகாஜன சங்கத்தினர் அளித்த புகாரின் பேரில், அவருக்கு சம்மன் வழங்க சென்றபோது அவர் தலைமறைவானது தெரிய வந்தது.

இதற்கிடையே, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடிகை கஸ்தூரி முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்த நிலையில், இன்று ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து  மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், மதுரை மாநகர காவல் துறை ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில்,  நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress kasthuri case special forces are active in the search


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->